--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : தொற்று பாதிக்கப்பட்டோர் 5083..! உயிரிழந்தோர் 108 பேர்!!

14

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,083பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று போல் இன்றும் பலி எண்ணிக்கை நூறைத் தாண்டி 108 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் என உயர்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவாக பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

 

தொற்று பாதிப்பு

தமிழகத்தில் இன்று 5083 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,501ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்ந்துள்ளது. இது வரை தொற்று தொடர்பாக 28,08,395 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது.

 

இன்று மட்டும் கொரோணா தொற்று பாதிப்பால் 108 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 4,349ஆக உயர்ந்து உள்ளது.

 

“சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,04,027 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்”

 

அதிக பாதிப்பு

சென்னைக்கு அடுத்து விருது நகரில் 424 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் 358 தேனி 292, கடலூர் 261 , செங்கல்பட்டு 245, கோவை 228, காஞ்சி 220 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Subscription

Leave a Reply

Right Menu Icon