--- --:--:-- --

வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் தீக்குளித்த நபர்..!

10

சென்னையில் புழல் அருகே வீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான நபர் தீக்குளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விநாயகபுரத்தில் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் பெயிண்டிங் வேலை செய்யும் ஸ்ரீநிவாசன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

பொது முடக்கத்தால் அவர் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்யுமாறு உரிமையாளர் சீனிவாசனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் உரிமையாளர் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடந்த ஒன்றாம் தேதி காவல் ஆய்வாளர் சீனிவாசன் விசாரணை நடத்தியுள்ளார்.

 

இதனால் மனமுடைந்த சீனிவாசன் அன்று நள்ளிரவே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இறப்பதற்கு முன்பாக காவல் ஆய்வாளர் தம்மை அடித்ததாலேயே தற்கொலைக்கு முயற்சித்ததாக ஸ்ரீனிவாசன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon