காதல் திருமணம் : மருமகனை கொலை செய்த மாமனார்..!
தர்மபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மாமனாரை மருமகனை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பஞ்சம் பள்ளி அருகே உள்ள ஓட்டல் திண்ணை கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ படித்த விஜய் கொலை செய்யப்பட்டவர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பொறியியல் படித்து வந்த மாணவி ராஜேஸ்வரியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாமனார் தனக்கு சொந்தமான மாங்காய் மண்டிக்கு வருமாறு விஜய்க்கு கடந்த ஒன்றாம் தேதி அழைப்பு விடுத்தார். மாமனாரை பார்க்க சென்ற விஜய் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமனார் மற்றும் அவரது உறவினர்கள் என ஆறு பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாமனார் தரப்பினரே மருமகனை தலையில் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று விபத்து நடந்தபோது நாடகமாடியது தெரியவந்துள்ளது.
சரக்கு வாகனத்தில் உடலை மறைத்து அதன்மீது தக்காளி பெட்டிகளை அடுக்கி எடுத்துச் சென்று சடலத்தை வீசியுள்ளனர். இதனையடுத்து மாமனாரும் முனிராஜ் அவரது உறவினர்கள் வீரமணி, சித்துராஜ், மகாலிங்கம் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் விஜய் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து மூடிராஜ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.






