வனிதாவை அவதூறாக பேசிய சூர்யா தேவிக்கு கொரொனாவா?
?????????????????????????????????????????????????????????
நடிகை வனிதா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சூர்யா தேவிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் குடும்பத்துடன் மாயமான அவரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூராக பேசுவதாக நடிகை வனிதா தந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி என்பவரை சென்னை வடபழனி மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது சூர்யா தேவிக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதன் முடிவுகள் தற்போது வெளியான நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜாமினில் வெளிவந்த சூர்யா தேவிக்கு இது குறித்து தகவல் அளிக்க தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை துண்டித்ததாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குடும்பத்துடன் மாயமான நிலையில் அவரின் விருகம்பாக்கம் வீடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் தேடி வருகிறார்கள்.







