டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 101வது நாளாக நடைபெறுகிறது..!
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்து நடைபெற்றுவந்தது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






