கொரோனா நமது ஒற்றுமையை பரிசோதிக்கிறது!
டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பொருளாதார மற்றும் சமூக ரீதியாக இந்த தேசம் மிகவும் கடினமான சோதனைகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். அகதிகளின் உரிமைகளைப் பற்றி உலகம் முழுவதும் பேசக் கூடியவர்கள் தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக்கூடிய சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் பிரதமர் எதிர்க்கட்சிகளை சாடினார்.
அரசியல் சாசனம் பற்றி பேசுபவர்கள் தான் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து அரசியல் சாசனத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று மோடி கூறினார். இந்திய பொருளாதாரம் தற்போது கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருப்பதாக மோடி கவலை தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவின் பொருளாதாரக் கட்டுமானம் உறுதியானது என்று தெரிவித்த மோடி, ஐந்து டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் மானுடத்திற்கு மிகப்பெரிய சவால்கள் தோன்றியுள்ளன என்று கூறிய மோடி இன்று கொரோனா வைரஸ் உலகிற்கே மிகப்பெரிய சவாலாக விளங்குவதாக குறிப்பிட்டார்.
நமது பலத்தையும் ஒற்றுமையையும் இது பரிசோதிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




