கோவை மாநகராட்சி சார்பில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை !!!
கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டி வருகிறது.தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் பல்வேறு வகையான செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.சில செய்தியாளர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுக்கும்,புகைப்பட கலைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அந்த வகையில் இன்று கோவை மாநகராட்சியில் இன்று செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுக்கும்,புகைப்பட கலைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.100 க்கும் மேற்பட்ட செய்தியாளர்களும்,புகைப்பட கலைஞர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.கொரோனா பரிசோதனை மேற்கொண்ட செய்தியாளர்களுக்கு கபசூர குடிநீர்,மல்டி விட்டமின் மாத்திரைகள்,ஜிங்க் மாத்திரைகள்,ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் அடங்கிய கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பும் வழங்கப்பட்டது.







