--- --:--:-- --

பயணிகளுக்கு எச்சில் தொட்டு வழங்கிய நடத்துனருக்கு கொரொனா பரிசோதனை..!

4

திருப்பூரில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு வழங்கிய பயணச் சீட்டு நடத்துனருக்கு மருத்துவ கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது. கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்று அரசு பேருந்து பயணிகளுக்கு நடத்துனர் எச்சி தொட்டு பயணச்சீட்டுகளை வழங்கியதாக கூறபடுகிறது.

 

இதுகுறித்து பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேருந்து திருப்பூரை வந்தடைந்ததும் நடத்துநர்கள் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

 

திருப்பூரில் தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மேலும் பல வகையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon