கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்றும் போது நடந்த விபரீத சம்பவம்..!
மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் கிணறு இடிந்ததில் விழுந்த பலரை தேடும் பணி நடக்கிறது. வீடிஷா மாவட்டத்திலுள்ள கஞ்ச்பசோரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுமி தவறி விழுந்தார்.
கிணற்றில் 20 அடி நீர் இருந்துள்ளது. அவரை காப்பாற்ற சிலர் இறங்கியுள்ளனர். தகவலறிந்து வந்து கூடிய கிராமத்தினர் கிணற்றில் தடுப்பு சுவரை சுற்றி நெருக்கியடித்து நின்றதால் பாரம் தாங்காமல் அது இடிந்து ஏராளமானோர் இடிபாடுகளுடன் கிணற்றில் விழுந்தனர்.
அப்போது மீட்பு பணியில் இருந்த டிராக்டர் 4 போலீசாருடன் கிணற்றுக்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் பல சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.






