தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்..!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாகச் சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வீரியம் இல்லாத கொரோனா என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேலையை காட்டத் தொடங்கி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




