பிரபல நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாசிட்டிவ்..!
பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெப்சீரிஸ் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
அங்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதில் கொரொனா உறுதியானதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரொனா உறுதியானது. இருப்பினும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






