--- --:--:-- --

“இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்!!” ஒரு நாள் உயிரிழப்பில் அமெரிக்காவை முந்தியது..! பாதிப்பில் பிரேசிலை விட ஜாஸ்தி!!

54

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்து தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அமெரிக்கா, பிரேசிலுடன் போட்டி போட்டு இந்தியா முன்னேறுகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்திலான ஒரு நாள் உயிரிழப்பில் அமெரிக்காவையும், ஒரு நாள் தொற்று பாதிப்பில் பிரேசிலையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா.

 

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 349 ஆகவும், மொத்த உயிரிழப்பு 6 லட்சத்து 8 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு (38,98,550) மற்றும் உயிரிழப்பில் (1,43,289) அமெரிக்கா தான் டாப் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக பிரேசிலில் பாதிப்பு (20,99,896) ஆகவும், உயிரிழப்பு (79, 533) என பதிவாகி 2-வது இடத்தில் உள்ளது. இந்த இரு நாடுகளுக்கு அடுத்ததாக அதிக தொற்று பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 11 லட்சத்து18 ஆயிரத்து 107 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில் போன்று இந்தியாவில் மோசமான பாதிப்பு இல்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் தொற்று பாதிக்கப் பட்டோரில் உயிரிழப்பு சதவிதம் தொடர்ந்து குறைந்து தற்போது 3.6% என்ற அளவிலும், பிரேசிலில் 3.9% என்ற அளவிலும் உள்ள நிலையில் சிறப்பு விகிதம் 2.5% என்ற அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.


உயிரிழப்பு வேகம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வேகம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு சராசரியாக 40 ஆயிரமாகவும், உயிரிழப்பும் சராசரியாக தினசரி 600-க்கு மேல் என்ற அளவில் பதிவாகி முதல் இரண்டு இடத்தில் உள்ள அமெரிக்கா, பிரேசில் நாடுகளுடன் போட்டி போட்டு இந்தியா முன்னேறுகிறது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 65, 279 ஆக உயர்ந்திருந்தாலும் உயிரிழப்பு 412 ஆக குறைந்துள்ளது. இதேபோல் பிரேசிலில் தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் தற்போது மளமளவென குறையத் தொடங்கி கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு 24,650 ஆகவும், உயிரிழப்பு 716 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 40,243 ஆகவும், உயிரிழப்பு 675 ஆகவும் பதிவாகியுள்ளது. இதில் ஒரு நாள் தொற்று பாதிப்பில் பிரேசிலையும் (24,650), உயிரிழப்பில் அமெரிக்காவையும் (412) இந்தியா முதன் முறையாக பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் தற்போது பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவதனால் அடுத்து வரும் நாட்களில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளுடன் போட்டி போட்டு முன்னேறும் என்றே தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon