இந்தியாவில் நவம்பரில் மாதத்தில் கொரோனா உச்சம்! மக்கள் அனைவரும் அச்சம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பர் மாதத்தில் உச்சம் தொடும் என்று ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி குழு ஆய்வு நடத்தியது.
அதன்படி இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வைரஸின் தாக்கம் உச்சம் தொடுவது 34 நாட்களில் 74 நாட்களாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நவம்பர் மாத மத்தியில் கொரொனா நோயின் தாக்கம் உச்சம் தொடும் என்று தெரியவந்துள்ளது.
அப்போது தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் போதுமானதாக இருக்காது என்றும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப் படாமல் இருந்தால் படுக்கைகளின் தேவை 83 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.







