மருந்து வாங்க வரிசையில் காத்திருக்கும் கொரொனா நோயாளி..!
மருந்து வாங்குவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த மருந்தை பெறுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.
மருந்து வாங்க வருகின்ற மக்கள் முதல் நாளிலேயே பதிவு செய்யப்பட்டு மருந்து வழங்க கூடிய சூழல் உள்ளது. வெளியூர்களில் இருப்பவர்கள் 2 நாட்கள் தங்கி மருந்து வாங்கி செல்லக்கூடிய சூழல் நிலவுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு இன்னலுக்கும் ஆளாகியுள்ளனர்.
கொரொனா நோயாளியும் இந்த கூட்டத்தில் மருந்து வாங்க வரிசையில் நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






