பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – உதயநிதி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு கொரொனா பாதுகாப்பு உபகரணங்களை அவர் வழங்கியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மிகப்பெரிய வெற்றி கொடுத்த மக்களுக்கும் பணி செய்த தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது எனது தாத்தாவின் வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







