--- --:--:-- --

திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று..!

1

நாகர்கோவில் தொகுதியில் திமுக எம்எல்ஏ வும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது என்று உறுதியானது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சுரேஷ் ராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு அவருக்கு கொரொனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாகர்கோவில் திமுக நகர செயலாளர் மற்றும் திமுக கலை இலக்கிய தலைவர் ஆகியோரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon