பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி.!
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்சுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய தொற்று பாதிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. தடுப்பு ஊசிகள், மருந்துகள் என பல கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவற்றை முற்றிலும் ஒழிக்க மருத்துவர்களும் நிபுணர்களும் போராடி வருகின்றனர்.
நாள்தோறும் பலர் தொற்று பாதிப்பிற்கு ஆளாகி வரும் நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பில்கேட்ஸ் தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டதாகவும் கூறியுள்ளார்.
எனவே தொற்றிலிருந்து குணமாகும் வரை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பதிவேற்றியுள்ளார்.





