--- --:--:-- --

முதன் முறையாக 8 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதி ..!

9

ந்தியாவில் முதன் முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள நேரு விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததையடுத்து ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

பரிசோதனையின் முடிவில் அங்குள்ள 8 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்ட சிங்கங்களை உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 8 சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கும், ஹாங்காங்கில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon