தமிழகத்தில் 5 வேட்பாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!
குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் தொற்று கண்டறியப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. தேர்தல் பரப்புரை சூடு பிடித்து வரும் நிலையில் காணப்படும் அதிகரித்து வருகிறது.
மக்கள் நீதி மையம் கட்சியின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபு, அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ் ஆகியோருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம், மோகன்ராஜ் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் ஆகியோருக்கும் வைரஸ் தொற்று உறுதியானது.
இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சரின் குறிஞ்சிபடி திமுக வேட்பாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு கண்டறியப்பட்டுள்ளது. பரப்புரையில் இருந்தவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






