திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 1466 போருக்கு கொரோனா தொற்று உறுதி.. 23 பேர் உயிரிழப்பு!!
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 34 ஆயிரத்து 326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 10823 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 758 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.



