--- --:--:-- --

அலோபதி மருத்துவத்தை விமர்சிக்கும் பதஞ்சலி சாமியார் பாபா ராம்தேவ்..!

1

கொரொனா பரவல் தீவிரமாக பரவும் இந்த சூழலில் அலோபதி மருத்துவமனைக்கு எதிராக பேசிய பதஞ்சலி சாமியார் பாபா ராம்தேவ் மீது பெருந்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஐ‌எம்‌ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

 

ஆங்கில மருத்துவ முறையான அலோபதியை தவறாக விமர்சித்து ராம்தேவ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. இதையடுத்து ராம்தேவ் குற்றச்சாட்டை ஏற்று அலோபதி மருத்துவ முறையையும், அதன் வசதிகளையும் கலைத்திட வேண்டும் அல்லது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதற்கு முன்னரும் தனது மருந்துகளை விற்பதற்காக மத்திய சுகாதார அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே அலோபதி மருத்துவத்தை ராம்தேவ் எள்ளி நகையாடி உள்ளார் எனவும் ஐ‌எம்‌ஏ கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon