--- --:--:-- --

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரொனா தொற்று உறுதி..!

1

சிகலாவை தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் இளவரசிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலை ஆவதற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

உறவினர்களின் கோரிக்கையை அடுத்து கூடுதல் வசதிக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பரிசோதனை செய்தபோது சசிகலாவுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

இந்நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

 

இந்த நிலையில் சசிகலாவுடன் தொடர்பு இருந்த இளவரசிக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நேற்று கொரொனா இல்லை என்று முடிவு வந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon