--- --:--:-- --

நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை எனப்புகார்..!

8

டிகர் வடிவேலு திரைப்படத்தில் கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நிகழ்ந்துள்ளது.

 

இங்குள்ள ஒட்டவிலை என்ற பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் தனது கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

காவல்துறையில் புகார் குறித்து விளக்கம் அளித்த ஊராட்சிமன்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ கட்டியவாங்கோடு ஊராட்சிக்கு சொந்தமான கிணறு தனிநபர் ஒருவரால் மண் நிரப்பி ஆக்கிரமித்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய ஜெயஸ்ரீ விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon