--- --:--:-- --

மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு விஷால்..!

2

டிகர் விஷ்ணு விஷால் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஐபிஎஸ் அதிகாரியின் மகனும், நடிகருமான விஷ்ணு விஷால் என்பவர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை சொந்தமாக வாடகைக்கு எடுத்து கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்ததாகவும் அந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்தே வசித்து வரக்கூடிய இடத்தில் திரைத்துறைக்கு பயன்படுத்தக்கூடிய ஆடியோ சாங் மட்டும் செல்லக்கூடிய மெசினையும் வைத்து கொண்டு இரவு நேரம் முழுவதும் அவர்அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் தினமும் ஆடிப்பாடி குத்தாட்டம் ஆடுவது தெரிய வந்துள்ளது.

 

இதுபோன்ற விஷயங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும். இது தொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சங்கத்தின் செயலாளர் தனபால் என்பவர் நேற்று இதே போல விஷ்ணுவிஷால் வசித்து வந்த மாடியில் அதிக சத்தம் கேட்டதாகவும் இது போன்ற பலர் குடியிருக்க கூடியபகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டபோது இருவருக்கும் வாக்குவாதம் நேர்ந்துள்ளது.

 

எனவே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து அவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர் .

 

அப்போது தனது தந்தை ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால் கொடுத்த புகார்களுக்கு நீங்கள் என்னை விசாரிக்க முடியுமா என்று போலீசாருடன் வாக்குவாதம் செய்வது மட்டுமல்லாமல் அந்த புகார் அளித்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சங்க செயலாளருடன் அவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon