--- --:--:-- --

ஒரே ஏ‌டி‌எம் இல் பணம் எடுத்த 3 ராணுவ வீரருக்கு கொரொனா!

2

குஜராத்தில் ஒரே ஏடிஎம்மில் பணம் எடுத்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரொனா இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்தில் 3 வீரர்களும் ஒரே நாளில் பணம் எடுத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுடன் தொடர்பிலிருந்து 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக ராணுவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சென்னையில் வசித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கின் போது பேருந்து, ரயில் கிடைக்காததால் கடல் மார்க்கமாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தனது சொந்த ஊருக்கு சென்றனர். அந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒடிசா ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் பணியாற்றி வந்துள்ளனர்.

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்களில் பலரால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 27 புலம்பெயர் தொழிலாளர்கள் காவல்துறை கெடுபிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல்மார்க்கமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவெடுத்தனர். இதற்காக சொந்தமாக படகை வாங்கி 7 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை சேகரித்தனர்.

 

அந்த பணத்தில் மூன்று ஆண்டுகள் பழமையான 9 ஹெச்பி திறன் எஞ்சின் கொண்ட படகுகளை வாங்கி ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை கடல் வழியாகவே பயணித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon