கொரொனா பிரச்சனையை மத்திய அரசு சரி வர கையாளவில்லை!
கொரொனா பிரச்சனையை மத்திய அரசு சரி வர கையாளவில்லை என்றும் கொரொனாவை எப்படி தளர்த்துவது என தெரியாமல் அரசு திணறி வதாகவும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காணொலி முறையில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். கொரொனாவை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்ப முனைவதாகவும் அரசு மீது சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை அரசு சரிவர பின்பற்றவில்லை என்றும் சோனியா காந்தி தெரிவித்தார். கொரொனாவை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறையும் தாராள மனப்பான்மையும் இல்லை என்றும் சோனியா குறை கூறினார். அதிக அளவில் பரிசோதனைகளை செய்வது தான் கொரொனாவை வெற்றி கொள்ள முக்கிய வழி என்று தெரிவித்த அவர் ஆனால் அரசு அதை செய்யவில்லை என்றார் .
இதை தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரொனாவை சமாளிப்பதில் தான் ஊரடங்கின் வெற்றியை மதிப்பிட முடியும் என்றார். கொரொனாவை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இடையில் நல்ல ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.






