--- --:--:-- --

திருவாடானை நீதிமன்றத்தில் கொரானா விழிப்புணர்வு!!

திருவாடானை நீதிமன்றத்தில் கொரானா விழிப்புணர்வு!!

திருவாடானை நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நீதித்துறை நடுவர் மன்றத்துடன் இணைந்த மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் தலைமையில் வழக்கறிஞர் சங்க தலைவர் நாராஜன் முன்னிலையில் கொரானா வைரஸ் பற்றியும் அதை தடுப்பது குறித்தும், அறிகுறிகள் குறித்தும், பாண்டுகுடி சுகாதார மருத்துவர் மினுசிட்டிபாபு விளக்கி கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கோட்டைச்சாமி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வழிகள் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon