நிமிடத்துக்கு 2 பேரை தாக்கும் கொரானா ஒரே நாளில் 2 லட்சம் பேர்..!
உலகம் முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் புதிதாக கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாக கொரொனா பரவி வருகிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் இரண்டு லட்சத்து எட்டாயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவர்களும் மருத்துவம் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
நோய்களின் வேகம் அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் செல்ல அனுமதி என்ற திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் ஜனவரி 15ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





