--- --:--:-- --

ஊரடங்கு, கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு..!

4

மிழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தான் ஊரடங்கு இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பிவரக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் ஓமிக்ரான் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறுகிறது.

 

ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் கலந்து கொள்ள இருக்கின்றனர். கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு குறித்து நாளை முடிவெடுக்கப்படுகிறது.

 

Right Menu Icon