பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா உறுதி..!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் சுகாதாரத்துறை தொற்று உறுதியானதை அடுத்து இம்ரான்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தான் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாகிஸ்தானுக்கு நன்கொடையை அளிப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து 5 லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு சீனா இரண்டாவது கட்டமாக அண்மையில் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் இந்த தடுப்பூசியை பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை போட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அடுத்த இரண்டாவது நாளிலேயே இம்ரான் கானுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.






