தமிழகத்தில் இன்று 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு..486 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில், 224 பேர் தனியார் மருத்துவமனையிலும், 262 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும், 3,12,386 பேர் சிகிச்சைப்பெற்று வருகிறனர். கடந்த 24 மணிநேரத்தில் 31,255 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.





