--- --:--:-- --

சாலையோரம் நாதஸ்வரம் வாசித்த நபருக்கு வாய்ப்பளித்த ஜி.வி பிரகாஷ்..!

13

டந்த சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் நாதஸ்வரம் வாசித்த பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் அவரது திறமையைக் கண்டு அசந்துபோன இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அந்த நபரை கண்டுபிடித்து தருமாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

இதனையடுத்து அந்த நாதஸ்வர இசைக் கலைஞரை கண்டறிந்து விட்டதாகவும் தான் இசையமைக்கும் திரைப்படத்தில் அவரது திறமையை உபயோகப்படுத்திக் கொள்ள போவதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இணையவாசிகளின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon