--- --:--:-- --

மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனையா.!

5

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து பேசியுள்ளார். நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு மத்திய அமைச்சர்களை பிரதமர் தனித்தனியே சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தம் துறைகளில் சாதித்தது குறித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் இல்லத்தில் இதுபோன்று மூன்று சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும் ஒவ்வொன்றும் ஐந்து மணி நேரம் வரை நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

 

அடுத்து வரும் நாட்களிலும் இந்து போன்று சந்திப்புகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமைச்சருடன் சந்திப்பு தவிர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி பேசி உள்ளதாக தெரிகிறது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon