உருகி வரும் பனித்தீவு..! விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனி தீவு வேகமாக உருகி வருவதால் அடுத்த 20 ஆண்டுகளில் காணாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் உள்ள தீவில் முழுவதும் பனிப்பாறைகளால் உருவானது.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் பைன் தீவு வேகமாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் தீவின் ஓரங்கள் அரிக்கப்பட்டு அமன்சன் கடலுக்குள் கரைந்து போனது தெரியவந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்த தீவு முழுவதும் கரைந்து போகும் என்றும், இதனால் அண்டார்டிகா பகுதியில் கடல் நீர் மட்டம் ஒரு அடிக்குமேல் உயரும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.







