அரசியல் சாசனத்தை காக்க அனைத்து கட்சிகளோடு காங்கிரஸ் இணைந்து பாடுபடும் – சோனியா காந்தி
அரசியல் சாசனம் மற்றும் அதன் லட்சியங்களை பார்க்க அனைத்து கட்சிகளோடு இணைந்து காங்கிரஸ் பாடுபடும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான அவர் எழுதிய கட்டுரையில் இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசாமல் இருப்பதால் அதனை தீர்த்துவிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்று தூண்களை திட்டமிட்டு தளர்த்தி வருவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு முடக்குவதாகவும் புகார் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வழக்குகள் தொடரப்படுவதாகவும் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





