கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கவலைக்கிடம்..!
காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் 6000 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்கு கடந்த 11ஆம் தேதி தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருடைய மனைவி தமிழ்செல்விக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த இரண்டு வார காலமாக தொடர்ச்சியாக அவருடைய மனைவியின் உடல் நிலையை விட இவருடைய உடல் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






