--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய காவலர்களுக்கு குவியும் பாராட்டு..!

9

ன்னார்குடியில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு புதிய உடை மாற்றிவிட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் சேர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஒற்றை கந்தல் துணியை மட்டுமே அணிந்திருந்தார். இதை பார்த்த அவர்கள் உடனே இருவரும் புதிய ஆடைகளை வாங்கி வந்து மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு உடைகளை மாற்றியுள்ளனர்.

 

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து அவர்களை பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon