ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவில் இருந்த டியூபிளைட் துண்டுகள்..!
வேலூரில் தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்வின் போது பரிமாறப்பட்ட உணவில் டியூபிளைட் துண்டுகள் இருந்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. அலமேல்ரங்கா புரத்தை சேர்ந்த வாசி என்பவர் தனது மகளின் நிச்சயதார்த்தத்திற்கு சத்துவாச்சாரியில் உள்ள ஜூனியர் குப்பண்ணா என்ற தனியார் ஓட்டலில் மினி ஹாலை வாடகைக்கு எடுத்து விழாவை நடத்தியுள்ளார்.
அப்போது அதே உணவகத்தில் சைவ உணவை தரிவித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சாப்பிட்ட போதும் உணவில் உடைந்து டியூபிளைட் துண்டுகள் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சிலர் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






