இந்தியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள உலக நாடுகள்..!
இந்தியாவில் கொரொனா பரவலை ஒழிக்க இந்தியாவில் கொரொனா இடத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இமாலய இலக்கை எட்டுவதற்காக உலக நாடுகள் பாராட்டி வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ட்விட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டிருக்கும் பதிவில் உயிர் காக்கும் தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தினால் தான் உலகம் முழுவதும் இருந்து கொரொனா பெருந்தொற்றை விரட்டியடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் 100 கோடி தடுப்பூசிகள் என்ற இமாலய இலக்கை எட்டி இந்திய அசாதாரண சாதனை படைத்து இருப்பதாக கூறியுள்ளார். இதேபோல் பூட்டான் பிரதமர், இலங்கை பிரதமர், அதிபர் உள்ளிட்டோரும் இந்தியாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவச் சங்கம், பிரதமர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விரைவில் கொரொனா இல்லாத தேசமாக மாறும் என கூறியுள்ளது.






