ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்த யோகிபாபுவின் திரைப்படம்..!
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்த மண்டேலா கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாகி விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
நகைச்சுவை நடிகர், ஹீரோ என பயணித்து வரும் யோகிபாபுவுக்கு காலத்திற்கும் பெருமைப்படக் கூடிய படமாக அமைந்தது மண்டேலா. சமூக செயல்பாட்டாளர்கள், கிரிக்கெட்வீரர்கள் என பல தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது இந்திய அரசு சார்பில் தமிழிலிருந்து மண்டேலா திரைப்படம் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






