--- --:--:-- --

பள்ளிகளிலேயே விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய வேண்டும் – பிரதமர் மோடி

01

2036 ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த போகும் குழந்தைகளுக்கு தற்போது வயது 5 – 10 இருக்கலாம். அதனால் பள்ளிகளிலேயே அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மத்திய அரசு செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி துறைகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் அடிப்படையில் அமைச்சரவை செயலாளர்கள் மற்ற துறை செயலாளர்களுக்கு விரிவான 23 முக்கிய செயல் திட்ட அறிவுறுத்தல்களை கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளனர்.

 

இதில், விளையாட்டு, திறன் மேம்பாடு, விவசாயம், செயற்கை நுண்ணறிவு, மருந்துத் துறை, அரசு கொள்முதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. அதன்படி, விகாசித் பாரத் @2047 என்ற திட்டம் வெறும் அரசின் திட்டமாக இல்லாமல், வெகுமக்கள் இயக்கமாக மாற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, சாமானிய மக்களும் முன்னெடுக்கும் தேசிய இயக்கமாக அதை மாற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

 

 

இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைத் தடுப்பதற்காக, ‘மை பாரத்’ பிரச்சாரத்தை இணையம் மூலம் முன்னெடுக்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக, ஊக்கமளிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட திட்டங்களையும் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளார். 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 

 

2036 ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைகள் தற்போது ஐந்து முதல் பத்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். எனவே பள்ளி மட்டத்திலேயே விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அரசு துறை செயலாளர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon