சைவ உணவகத்தில் வாங்கிய பார்சலில் இறைச்சி இருந்ததால் புகார்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கிய பார்சலில் இறைச்சி இருந்ததால் புகார் எழுந்தது. காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சைவ உணவகத்தில் 35 பார்சல் சாப்பாடு வாங்கியுள்ளார்.
பீட்ரூட் பொரியல் இறைச்சி இருந்ததாக முரளி புகார் அளித்துள்ளார். அதன் உண்மைத்தன்மை குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





