--- --:--:-- --

தமிழகத்தில் தனியார் ரயில்களை இயக்க ஆர்வம் காட்டி வரும் நிறுவனங்கள்..!

3

தமிழகத்தில் தெற்கு ரயில் வேயில் சென்னை மதுரை உட்பட 13 வழித்தடங்களில் தனியார் நவீன ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால் தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தனியார்த்துறை முதலீட்டால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதுடன் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தில் தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திராவில் 13 வழித்தடங்களில் 26 ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

 

இந்த ரயில்களை இரு வழிகளில் தினமும் இயக்கவும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இயக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இரு வழிகளிலும் சென்னை – மதுரை புதுச்சேரியில் இருந்து சென்னை வழியாக செகந்தராபாத்திருக்கும் சென்னையிலிருந்து, கோவை இரு வழிகளிலும் ரயில்களை இயக்க தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல நெல்லை – கோவை, நெல்லை – சென்னை, திருச்சி – சென்னை, கன்னியாகுமரி – சென்னை, கன்னியாகுமரி – எர்ணாகுளம், சென்னை – டெல்லி, சென்னை – ஹவுரா ஆகிய வழித்தடங்களில் இருவழியாக ரயில்களை இயக்க தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மங்களூர் – சென்னை வாராந்திர ரயில், சென்னை – மும்பைக்கு வாரம் இருமுறையும், கொச்வெலி – தௌகாத்தி இடையிடையே வாரத்தில் மூன்று நாட்கள் என்று 13 வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட், டாட்டா ரியாலிட்டி, பிரான்சின் அல்ஸ்தாம், மெக்குபர் குழுமம் ஆகியவை ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon