--- --:--:-- --

பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது மாற்றுத் திறனாளியைத் தாக்கியதாக புகார்..!

4

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை உதவி ஆய்வாளர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

இராமநாதபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அய்யா துரை என்பவர் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் பேய் குளத்தில் மதப்பிரச்சாரம் செய்த புகாரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய இருவரும் அய்யாதுரையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் இது குறித்த விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் அளிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon