--- --:--:-- --

வரும் 20 ஆம் தேதி தோனிக்கு சென்னையில் பாராட்டு விழா..!

4

14வது ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் 20ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது. ஐபிஎல் போட்டியில் 14 வது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

நான்காவது முறையாக கோப்பை வென்ற அணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டை தெரிவித்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை கொண்டாட காத்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு சென்னைக்கு வரும் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon