ரயில் படிக்கட்டில் மோதல்…கீழே விழுந்து இருவர் பலி..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரயில் படிக்கட்டில் அமருவதில் ஏற்பட்ட தகராறில் தவறி விழுந்த இருவர் உயிரிழந்தனர். நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயிலில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஈரோடுக்கு பயணித்துள்ளார்.
இதே ரயிலில், கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பனும் பயணித்துள்ளார். இந்த நிலையில், ரயிலின் படிக்கட்டில் அமருவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பாக மாறியதையடுத்து சாத்தூர் அருகே இருவரும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.இதனை கண்ட பயணிகள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயிலில் இருந்து விழுந்ததில் முத்துக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மாரியப்பன், மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, தூத்துக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




