--- --:--:-- --

சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கொடூர தாய்…!

6

ந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் 30 வயது பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் உடல்நலக் குறைவால் 2007 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது தாய் மாமன் சதீஷ் குமாரை இரண்டவாது திருமணம் செய்து கொண்டார்.

 

முதல் கணவருக்கு பிறந்த இரண்டு மகள்களுடன் 2 வது கணவன் சதீஷ்குமாருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார் இந்த பெண். இந்த நிலையில், சதீஷ் குமார் தனக்கென வாரிசு வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்ய தொடங்கியுள்ளார். அதற்கு அந்த பெண் குடும்பக் கட்டுப்பாடு செய்து செய்துள்ளதாகவும், இனி அதற்க்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதனால் கோபமுற்ற 2 வது கணவன் குழந்தை இல்லையென்றால் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். கிடைத்த இந்த வாழ்க்கையும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில், ‘ வேறு பெண்ணை நீ கல்யாணம் வேணாம் என் மூத்த பொண்ணுகிட்ட குழந்தை பெத்துக்கோ” என்று கூறி விசாகப்பட்டினத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சதீஷிடம் ஒப்படைத்தார் அந்த பெண்.

 

சிறுமி எவ்வளவோ மன்றாடியும் காதுகொடுக்காத தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் கர்ப்படைந்த சிறுமியின்  கர்ப்பத்தை வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்று கலைத்துள்ளனர். மீண்டும் சிறுமியை பலாத்காரம் செய்ததால் இரண்டாவது முறை கர்ப்பமான சிறுமிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

 

எனக்கு பெண் குழந்தை வேண்டாம் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த கணவன். இரண்டாவது மகளுக்கு குறிவைத்த கொடூரனின் எண்ணத்தை அறியாமல், அதே போல் இரண்டாவது மகளையும் ஒப்படைத்தார் அந்த தாய்.

 

விளைவாக இரண்டாவது மகளுக்கு பிறக்கும் போதே ஆண் குழந்தை இறந்து பிறந்ததென்று குழந்தையை காலவாயில் வீசியுள்ளனர். அந்த பெண்ணிற்கும் சதீஷுக்கும் வாக்குவாதம் மீண்டும் வந்ததால் ஆத்திரமடைந்த பெண் விசாகப்பட்டினம் போலீசாரிடம் புகாரளித்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்த போலீசார், உடன் பெற்ற மகள்களின் வாழ்க்கையை சீரழித்த தாயையும் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon