தமிழகத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும்..!
தமிழகத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரொனா பரவல் குறைந்துள்ள சூழ்நிலையில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்ற அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. பொறியியல் இறுதியாண்டு, முதுநிலை மாணவர்களுக்கு ஆறு நாட்களும் வகுப்புகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன் வெள்ளியில் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







