--- --:--:-- --

8 மாதங்களுக்குப் பின் நாளை கல்லூரிகள் திறக்கப்படுகிறது..!

10

மிழகத்தில் கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பின் நாளை திறக்கப்பட உள்ளன. மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த போதிலும் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் முடிக்கப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன.

 

பின்னர் நவம்பர் 12 கல்லூரிகள் திறக்கும் முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாமாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் நாளை முதல் நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதித்துள்ளது.

 

தனிநபர் இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏழாம் தேதி முதல் நேரடி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Right Menu Icon