மழைக்கு நிழற்குடையில் தஞ்சமடைந்த கரடி..!
கோத்தகிரியில் கனமழையால் பேருந்து நிலையத்தில் மன்னார்குடியில் கரடி ஒன்று தஞ்சமடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தது.
அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் வாகனத்தை கரடி அருகில் சென்று பேருந்து நிலைய கட்டடத்தில் இருந்த கரடியை மீட்டு தேயிலை தோட்டத்திற்கு விரட்டியடித்தனர்.






